குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'


தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய அர்த்தமுள்ள வரவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன. திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருபவர்கள் இவர்கள்.

குறிப்பாக யாரிடமும் உதவியாளராக இல்லாமல் குறும்படங்கள் செய்து, பின் நேரடியாக திரைக்கு வருபவர்கள் இந்த படைப்பாளிகள். இந்தப் பட்டியலில் இடம்பெற வருகிறார் புஸ்கின் ராஜா. இவர் இயக்க இருக்கும் முதல் படத்துக்கு 'நே' என்று தலைப்பிட்டுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.
அது என்ன நே? நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என இதற்கு பல அர்த்ததங்கள் இருந்தாலும், எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதைதான் நே என்கிறார் இயக்குநர். 'தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன.

சிறுவர்கள் செய்யும் குற்றங்கள், தகாத உறவுகள், பாலியல் குற்றங்கள் பல தினம் தினம் நடக்கின்றன. அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள்தான் கதையின் அடிப்படை. மூன்று பேர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்புதான் இந்த த்ரில்லர் கதை," என்கிறார் புஸ்கின் ராஜா.

பொதுவான திரைக்கதை நெறிகளை பின்பற்றாமல் அதை உடைக்கும் வகையில் புதிய திரைக்கதை மொழியை உருவாக்க முயற்சித்து உள்ளாராம் புஸ்கின் ராஜா. இவர் இதற்கு முன்பு ஆக்க்ஷன் (Action) என்னும் குறும்படத்தை இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது இந்தப் படத்துக்கு சாரு நிவேதிதா வசனம் எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர் வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மாபியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!