ரஜினி பட ஷூட்டிங்கிற்காக மே வரைக்கும் காத்திருக்கணுமா?: சோனாக்ஷி


மும்பை: ரஜினி பட ஷூட்டிங் துவங்குவதற்காக நடிகை சோனாக்ஷி சின்ஹா காத்திருக்கிறாராம். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். ரஜினியின் ஸ்டைல் குருவான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி.

இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அது எனக்கு கிடைத்துள்ளது. மே மாதம் ஷூட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கிறேன். புது மொழி, புது மக்கள் மற்றும் புது துறையில் நடிக்கவிருக்கிறேன். இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள். இந்தியிலும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இந்திய சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட சோனாக்ஷி ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பியதும் ரஜினி படத்தில் நடிக்கிவிருக்கிறார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!