பெருச்சாழி பட ரீமேக்? கமல் மறுப்பு!


மலையாளத்தில் தயாராகும் பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிப்பதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தரப்பு தெரிவித்துள்ளது. மோகன்லால், ஆன்ட்ரியா, முகேஷ் நடிக்க, அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள மலையாளப் படம் பெருச்சாழி.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை பற்றிக் கேள்விப்பட்ட கமல் ஹாஸன், அந்தக் கதையின் தமிழ் ரீமேக்கில் தானே நடிக்க விருப்பம் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியில் உண்மையில்லை. கமலுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே மோகன் லால் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!