நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


“நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது 'கத்துக்குட்டி' படக்குழு!” (27.8.2014)



நரேன் - சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் 'கத்துக்குட்டி' இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அண்ணன் சூரி அவர்கள் 'கத்துக்குட்டி' படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. 'கத்துக்குட்டி' ஷூட்டிங்கிற்காக நாம் சூரி அண்ணனின் கால்ஷூட் கேட்டபோது, அவருடைய டைரி நிரம்பி வழிந்த நேரம். 'கத்துக்குட்டி' படத்தின் கதைக்கும் நம் நட்புக்கும் மட்டுமே தலைவணங்கி மிக பிஸியான நேரத்தில் நமக்காக நாட்கள் ஒதுக்கினார் சூரி. நாம் முதலில் அவரிடம் கேட்டது 15 நாட்கள் மட்டுமே. படத்தில் ஹீரோவுக்கு நிகரான பாத்திரம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு படங்களில் மிகுந்த பரபரப்பாக நடித்துவந்த அண்ணன் சூரியை அதற்கு மேல் கால்ஷூட் கேட்டு தொந்தரவு செய்துவிடக் கூடாது என எண்ணியிருந்தோம் நாம். ஆனால், நம் படத்தின் ஷூட்டிங் நல்லபடி நடைபெற வேண்டும் என்பதற்காக, தானே வலிய முன்வந்து கூடுதலாக நாட்களை ஒதுக்கிக் கொடுத்து சூரி அண்ணன் செய்த உதவி காலத்துக்கும் மறக்க முடியாதது.

சூரி அண்ணன் முன்வந்து ஆர்வம் காட்டுகிற அளவுக்கு நம் படம் ஒன்றும் பெரிய அளவிலான ஸ்டார்கள் நடிக்கும் படம் அல்ல. பிரபலமான இயக்குநர் இயக்குகிற படம் அல்ல. பிரமாண்ட நிறுவனம் தயாரிக்கிற படம் அல்ல. முழுக்க முழுக்க புதுமுக ஆட்களாலேயே எடுக்கப்பட்டு வரும் நம் படத்துக்காக சூரி அண்ணன் இவ்வளவு பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கதைகளுக்கும் காட்சிகளுக்கும் அவர் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார் என்பதற்கு நம் 'கத்துக்குட்டி' படத்துக்கு அவர் காட்டும் அக்கறையே சாட்சி.

மேலும் தகவல்களுக்கு க்ளிக் >> http://kaththukkutti.com/soori-birthday-celebration.html

வாழ்த்துக்கள்....

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!